×

5வது முறையாக நேபாள பிரதமரானார் ஷேர் பகதூர்

காத்மாண்டு: நேபாளத்தில் பிரதமர் சர்மா ஒலியின் பரிந்துரையின்பேரில், இரண்டாவது முறையாக நாடாளுமன்ற கீழவையை கடந்த மே 22ம் தேதி அதிபர் பித்யா தேவி பண்டாரியால் கலைக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஷேர் பகதூர் தேபாவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ஷேர் பகதூர் தேபாவை பிரதமராக அதிபர் பித்யா தேவி பண்டாரி நியமனம் செய்தார். 5வது முறையாக ஷேர் பகதூர் தேபா பிரதமராகி உள்ளார். அவருக்கு அதிபர் பித்யா தேவி பதவிபிரமாணம் செய்து வைத்தார். வருகிற நவம்பரில் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலியால் தேர்தல் ஏற்பாடுகள் தள்ளி வைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags : Sher Bahadur ,Nepal , Sher Bahadur becomes Prime Minister of Nepal for the 5th time
× RELATED வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி நகை பறித்த உணவு டெலிவரி ஊழியர் கைது